Tuesday, July 25, 2017

தமிழ் மாதமும் சூரியன் உதிக்கும் திசையும்

சித்திரை 1, ஆடி 1, தை 1 எல்லாம் விழா வாக கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் என்று நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியல வச்சிறுக்காங்க!

Ok. Let's look at the science behind it.

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" னு school பசங்களுக்கு சொல்லிதறோம்.

என்னைக்காச்சும் ஒரு திசைகாட்டி (compass) வச்சு சூரியன் உதிக்குறப்போ  சரிபார்த்து இருக்கோமா? கண்டிபாக இல்ல...
நம்ம  கல்வி முறை (education system)  வடிவமைத்த (design) வெள்ளகாரன், நம்ம கிட்ட இருந்த அறிவியலை அழிச்சிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்திட்டு போயிறுக்கான்றதுக்கு இதுவும் ஒரு சான்று.

ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாள்ல மட்டும் தான் சரியா  கி்ழக்கே உதிக்கும் அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு தீவிர புள்ளியில் (extreme point) மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும், அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்.

இப்படி சரியா கிழக்கு ல ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு போயிட்டு மறுபடியும் சரியா கிழக்குக்கு வர ஆகிற நேரம் ஒரு வருடம்.

சரி! இதுக்கும் தமிழ் மாததுக்கும் என்ன சம்பந்தம் னு தானே யோசிக்குறீங்க.

சூரியன் சரியா கிழக்குல தொடங்கும் நாள் தான் சித்திரை 1 புத்தாண்டு! (In science it is called Equinox)

அப்புறம் தீவிர வடகிழக்கு புள்ளி தான் ஆடி 1 (solstice)

மறுபடியும் கிழக்குக்கு வருவது ஐப்பசி 1 (equinox)

தீவிர தென்கிழக்கு செல்வது தை 1 (solistice)

இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனணவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு, ஆடிப்பெருக்கு
ஐப்பசி (equinox)- தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்

நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்.

- இது ஒரு WhatsApp செய்தி

No comments :

Post a Comment

Blog authors can delete the comment if it contains the inappropriate contents.